விளையாட்டு

FIFA தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த ஸ்பெயின்
- ஜெர்மனி முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி உள்ளது.
- ஸ்லோவாக்கியா தற்போது தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளது.
தஜிகிஸ்தானில் நடைபெற்ற CAFA நேஷன்ஸ் கோப்பையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், FIFA வெளியிட்ட தரவரிசையில், ஒரு இடம் பின்தங்கி 134வது இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்பெயின் 11 ஆண்டுகளில் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனி முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி உள்ளது.
எட்டு நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த பிளே-ஆஃப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஓமனை வீழ்த்தி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அக்டோபரில் நடைபெறும் AFC ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் சிங்கப்பூருக்கு எதிராக இந்தியா அடுத்ததாக மோத உள்ளது.
இதனிடையே, FIFA நேற்று வெளியிட்ட தரவரிசை பட்டியலில், ஸ்பெயின் முதலிடமும், பிரான்ஸ் இரண்டாவது இடமும், அர்ஜென்டினா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இங்கிலாந்து, போர்ச்சுகல், பிரேசில், நெதர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, இத்தாலி ஆகியவை முறையே அடுத்தடுத்து இடங்களை பிடித்து முதல் 10 இடங்களில் உள்ளன.
நான்கு முறை உலக சாம்பியனான ஸ்லோவாக்கியா தற்போது தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளது.