என் மலர்

    விளையாட்டு

    முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
    X

    ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் போஸ்

    முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது.
    • வலுவான இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    டார்வின்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டார்வினில் இன்று நடக்கிறது.

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அண்மையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று அசத்திய கையோடு இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

    ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. பந்து வீச்சில் ஹேசில்வுட், நாதன் எலிஸ், பென் துவார்ஷூயிஸ் மிரட்டக்கூடியவர்கள். தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் விளையாடுவார்கள் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அரங்கேறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியை அந்த அணி இந்த தொடரில் இருந்தே தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் கடந்த ஜூன் மாதம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. அதன் பிறகு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற தென்ஆப்பிரிக்கா சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் பங்கேற்ற 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்திடம் 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. அந்த தோல்வியில் இருந்து விடுபட்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராகும் ஆர்வத்தில் உள்ளது.

    ஜிம்பாப்வேயில் நடந்த 20 ஓவர் போட்டியில் ஆடாத கேப்டன் மார்க்ரம், ரையான் ரிக்கெல்டன், வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா ஆகியோர் இந்த தொடருக்கு திரும்பி இருப்பது தென்ஆப்பிரிக்க அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். மேலும் பேட்டிங்கில் டிரிஸ்டான் ஸ்டப்ஸ், லூஹான் டி பிரிட்டோரியஸ், பந்து வீச்சில் கார்பின் போஷ், லுங்கி இங்கிடி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    உள்ளூர் சூழலை கச்சிதமாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடர முனைப்பு காட்டும். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்துவதை பொறுத்தே தென்ஆப்பிரிகாவின் வெற்றி வாய்ப்பு அமையும் எனலாம். வலுவான இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் போட்டியில் 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 17 ஆட்டங்களிலும், தென்ஆப்பிரிக்கா 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், பென் துவார்ஷூயிஸ், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

    தென்ஆப்பிரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), ரையான் ரிக்கெல்டன், வான்டெர் டஸன், டிவால்ட் பிரேவிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஜார்ஜ் லிண்டே, பிரினெலன் சுப்ராயன், கார்பின் போஷ், ககிசோ ரபடா, நன்ரே பர்கர், லுங்கி இங்கிடி.

    இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×