கால்பந்து

இந்திய பெண்கள் லீக் கால்பந்து: ஒடிசா எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது ஈஸ்ட் பெங்கால்
- 13 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.
- இந்த சீசனில் கோகுலம் கேரளா அணியிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
இந்திய பெண்கள் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் ஒடிசா எஃப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து சாம்பியன் படத்தை உறுதி செய்துள்ளது.
67ஆவது நிமிடத்தில் சவுமியா குகுலோத் கோல் அடித்தார். இந்த கோல் வெற்றி கோலாகவும், சாம்பியன் பட்டத்தை உறுதி செய்வதற்குமான கோலாகவும் அமைந்தது.
ஆண்களுக்கான கால்பந்து தொடர் இந்தியன் லீக்காக (I-League) நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக தேசிய கால்பந்து லீக்காக நடைபெற்றது. அப்போது 2003-04-ல் ஈஸ்ட் பெங்கால் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2003-ல் ஏசியன் கிளப் சாம்பியன்ஷிப்பை வென்றது.
அதற்குப் பிறகு தற்போதுதான் 21 வருடத்திற்குப் பிறகு ஈஸ்ட் பெங்கால் அணி (ஆண்கள் மற்றும் பெண்கள்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்த சீசனில் ஈஸ்ட் பெங்கால் அணி கோகுலம் கேரளா அணியைத் தவிர மற்ற அனைத்தும் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் மட்டும் விளையாட வேண்டியுள்ளது. இதில் தோற்றாலும், டிரா செய்தாலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றும்.