என் மலர்

    கால்பந்து

    U20 பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் தகுதிச் சுற்று: இந்தியாவுடன் மோதும் அணிகள் பட்டியல் வெளியீடு
    X

    U20 பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் தகுதிச் சுற்று: இந்தியாவுடன் மோதும் அணிகள் பட்டியல் வெளியீடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்றில் இந்தியா டி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
    • இந்தியாவுடன் மியான்மர், இந்தோனேசியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளும் இடம் பிடித்துள்ளன.

    20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் அடுத்த வரும் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்க போட்டியை நடத்தும் அணியைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். அதன்அடிப்படையில் தகுதிச் சுற்று அடிப்படையில் 11 அணிகள் தகுதி பெறும்.

    இந்த நிலையில் தகுதிச் சுற்றுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா டி பிரிவியில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் மியான்மர், இந்தோனேசியா, துர்க்மெனிஸ்தான் நாடுகள் இடம் பிடித்துள்ளன.

    டி பிரிவு தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மியான்மரில் நடைபெறுகிறது. டி பிரிவில் உள்ள ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

    மொத்தம் 33 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் மட்டும் ஐந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. மற்ற பிரிவுகளில் 7 அணிகள் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிகளும், அதன்பின் சிறந்த 3 அணிகளும் என 11 அணிகள் மற்றும் போட்டியை நடத்தும் தாய்லாந்து என 12 அணிகள் பெண்கள் ஆசிய கால்பந்து தொடரில் பங்கேற்க தகுதி பெறும்.

    பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் அடுத்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த தொடரில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக் கோப்பை தொடரில் விளையாட அனுமதி பெறும்.

    Next Story
    ×