கால்பந்து

லிவர்பூல் அணியில் மேலும் 2 வருடம் நீடிக்கிறார் முகமது சாலா
- 2017ஆம் ஆண்டு லிவர்பூல் அணியுடன் இணைந்தார்.
- 8 வருட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 2 வருடம் ஒப்பந்தம் நீடிப்பு.
எகிப்தின் நட்சத்திர கால்பந்து வீரர் முகமது சாலா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு லிவர்பூல் அணியில் இணைந்தார். கடந்த 8 வருடங்களாக அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.
இவருடைய ஒப்பந்தம் இந்த சீசனுடன் முடிவடைகிறது. இதனால் அணியில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது சாலா லிவர்பூல் அணியுடன் மேலும் இரண்டு வருடத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் 2027 வரை லிவர்பூல் அணிக்காக விளையாடுவார்.
முகமது சாலா உடன் டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு, விர்ஜில் வான் டிக் ஆகியோருடைய ஒப்பந்தமும் நிறைவடைகிறது. ஆனால் இவர்கள் இருவரும் இன்னும் ஒப்பந்தம் குறித்து முடிவு செய்யவில்லை.
முகமது சாலா இது தொடர்பாக கூறுகையில் "நிச்சயமாக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எங்களிடம் இப்போது ஒரு சிறந்த அணி உள்ளது. முன்பும் எங்களுக்கு ஒரு சிறந்த அணி இருந்தது.
சாம்பியன் பட்டம் வென்று எனது கால்பந்து வாழ்க்கையை அனுபவிக்க எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுவதால் நான் கையெழுத்திட்டேன்.
இது மிகவும் நல்லது. எனக்கு இங்கு எனது சிறந்த ஆண்டுகள் இருந்தன. நான் எட்டு ஆண்டுகள் விளையாடினேன். இது 10 ஆண்டுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறத. இங்கே என் வாழ்க்கை மற்றும் கால்பந்தை போட்டியை அனுபவிக்கிறேன். என் கால்பந்து வாழ்க்கையில் சிறந்த ஆண்டுகள் இருந்தன" என்றார்.
முகமது சாலா லிவர்பூல் அணிக்காக 281 போட்டிகளில் விளையாடி 182 கோல்கள் அடித்துள்ளார். இவர் விளையாடியபோது லிவர்பூல் இங்கிலீஷ் பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது.