விளையாட்டு

'பார்முலா 1' கார் பந்தயத்தின் முதல் சுற்றில் இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் வெற்றி
- இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
- இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது 'பார்முலா 1' பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
'பார்முலா 1' கார் பந்தயத்தின் முதல் சுற்றான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது.
இதில் மெக்லரன் அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 42.06 நிமிடங்களில் கடந்தார்.
நெதர்லாந்தை சேர்ந்த வெர்ஸ்டாப்பர்ன் (ரெட்புல்) 2-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்சல் (மெர்சிடஸ்) 3-வது இடத் தையும் பிடித்தார்.
பார்முலா 1' கார் பந்தயத்தின் 2-வது சுற்று சீனா கிராண்ட் பிரீ வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
Next Story