என் மலர்

    விளையாட்டு

    வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு - RCB Cares நிதியுதவி!
    X

    வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு - RCB Cares நிதியுதவி!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
    • கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.

    முன்னதாக, நேற்று முன்தினம் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    நாங்கள் இந்த தளத்தில் கருத்துகளை வெளியிட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது. நாங்கள் வெளியே சென்றுவிடவில்லை. அமைதியாக இருப்பது என்பது இல்லாமல் போய்விட்டதாக இல்லை. இது துக்கம். ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வெற்றி பெற்ற பிறகு நினைவுகளை கூறும் வகையில் சக்தியுடன் நீங்கள் கொண்டாடினீர்கள். மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. ஆனால் ஜூன் 4-ந்தேதி (கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்) இது அனைத்தையும் மாற்றிவிட்டது.

    அந்த நாளில் நமது இதயம் வெடித்து சிதறியது. அதன் பிறகு ஏற்பட்ட அமைதி நமது இடத்தை நிறுத்தி வைத்தது. இந்த அமைதியில் நாங்கள் துக்கத்தில் இருந்தோம், எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தோம், கற்றுக் கொண்டிருந்தோம். இப்போது நிதானமாக வெறும் பொறுப்பை தாண்டி நாங்கள் மீண்டும் ஏதாவது செய்வதை தொடங்கி இருக்கிறோம். இதில் நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டுள்ளோம்.

    நாங்கள் இன்று (அதாவது நேற்றுமுன்தினம்) முதல் மீண்டும் இந்த தளத்திற்கு திரும்பியுள்ளோம், கொண்டாட்டத்துடன் அல்ல, அக்கறையுடன் வந்துள்ளோம். உங்களுடன் கூட்டாக நிற்க, முன்னேறி நடக்க தயாராக உள்ளோம். கர்நாடகத்தின் பெருமையாக இருக்க நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம். இந்த ஆர்.சி.பி. கேர்ஸ் நிதி குறித்து முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×