விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் முகமது ஹைகல்-சூங் ஹான் ஜியான் ஜோடியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-16, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
Next Story