விளையாட்டு

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- ஜெய்ப்பூர் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.
ஜெய்ப்பூர்:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.
இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 37-28 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
Next Story