தமிழ்நாடு செய்திகள்

10 ஆண்டுகளில் மிகவும் அதிகம்- மெட்ரோ ரெயிலில் ஜூலை மாதம் 1.03 கோடி பேர் பயணம்
- ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
- மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1 கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர். ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story