என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    மை டி.வி.கே. செயலி வழியாக 3 லட்சம் பேர் த.வெ.க.வில் இணைந்தனர்
    X

    'மை டி.வி.கே.' செயலி வழியாக 3 லட்சம் பேர் த.வெ.க.வில் இணைந்தனர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுமக்கள் பலர் ‘செயலி’ மூலம் கட்சியி்ல் ஆர்வமுடன் சேர தொடங்கினர்.
    • கட்சியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினர்.

    சென்னை:

    த.வெ.க.வில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பல்வேறு வசதிகளுடன் 'மை டி.வி.கே.' செயலி உருவாக்கப்பட்டது. பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை கட்சி தலைவர் விஜய் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

    செயலி மூலம் 1 நொடிக்கு 18 ஆயிரம் உறுப்பினர்கள் சேர வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பூத் நிர்வாகிகளை விஜய் நேரடியாக கண்காணித்து அறிவுரை வழங்கவும் வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    முதல் 15 நாட்களுக்கு கட்சியில் உள்ள பூத் முகவர்கள், நிர்வாகிகள் இணைவதற்கும் 15 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் இணையவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    செயலி மூலம் புதிதாக த.வெ.க.வில் இணைவதற்கு பொதுமக்களிடையே தீவிர ஆர்வம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முதல் பொதுமக்களும் இணைந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதையடுத்து பொதுமக்கள் பலர் 'செயலி' மூலம் கட்சியி்ல் ஆர்வமுடன் சேர தொடங்கினர். நேற்று முதல் இன்று காலை வரை சுமார் 3 லட்சம் பேர் த.வெ.க.வில் இணைந்து உள்ளனர்.

    கட்சியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினர். த.வெ.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி நேர்மையான முறையில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வலியுறுத்தி வருகிறார்.

    Next Story
    ×