தமிழ்நாடு செய்திகள்

காவல் நிலையத்திலேயே உயிரிழந்த பெண் எஸ்எஸ்ஐ- ஆய்வாளர் மீது பரபரப்பு புகார்
- போலீசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்கள் நிலை என்ன?
- முதலுதவி கூட செய்யாமல் என் அக்காவை கொன்றுவிட்டார்கள்
நாமக்கல் மாவட்டம் பேவல்குறிச்சி காவல் நிலையத்தின் பெண் எஸ்எஸ்ஐ காமாட்சி காவல் நிலையத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காமாட்சியின் இறப்புக்கு பணிச்சுமையே காரணம் என அவரது சகோதரி, ஆய்வாளர் மீது புகார் தெரிவித்துள்ளார்.
அதன் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்," எனது சகோதரிக்கு விடுப்பு கொடுக்காமல் டார்ச்சர் செய்தே கொன்றுவிட்டீர்கள். போலீசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்கள் நிலை என்ன?
வயிற்றில் கட்டி இருப்பதால் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், விடுப்பு கொடுக்காமல் வேண்டும் என்றே இரவு பணிக்கு வர வெச்சிருக்காங்க.
காவல் நிலையத்திலேயே உயிரிழந்திருக்காங்க. மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தால் மருத்துவர்கள் சோதித்திருப்பார்கள். ஆனால், இங்கு முதலுதவி கூட செய்யாமல் என் அக்காவை கொன்றுவிட்டார்கள்" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.