தமிழ்நாடு செய்திகள்

மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலி- போலீசார் விசாரணை
- எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
- பிரதீப்பை மீட்டு நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த பெரியபுலியூர் அருகேயுள்ள கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் பிரதீப் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.
இவர் கடந்த 16-ம் தேதி, கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், தங்களுக்கு சொந்தமான தறிகுடோனின் மேற்கூரையில் மழையால் பழுதான சிமெண்ட் அட்டையை சரி செய்வதற்காக குடோன் மேலே ஏறியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் பிரதீப்பை மீட்டு நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரதீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து அவரது தந்தை வேலுசாமி அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.