தமிழ்நாடு செய்திகள்

கரூர் துயர சம்பவம்: உதவி எண்களை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
- தவெக தலைவர் விஜய் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- கரூர் துயர சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உதவி எண்களை அறிவித்துள்ளார்.
கரூர்:
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
இந்நிலையில், கருரில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 04324-256306, 7010806322 ஆகிய எண்களை அறிவித்துள்ளார்.
Next Story