என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலுக்கு செல்ல தடை- ரூ.5 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு
    X

    தடை காரணமாக ராமேசுவரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலுக்கு செல்ல தடை- ரூ.5 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    • தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த கடற்காற்று வீசிவருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட கடலில் வழக்கத்தை விட காற்று அதிகளவில் வீசுகிறது. இதனால் 2 நாட்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

    இதையொட்டி மீனவர்களின் பாதுகாப்பை கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்காக அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இன்று அதிகாலை கடலுக்கு செல்ல வந்த மீனவர்கள் தடை உத்தரவை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இதன்காரணமாக இன்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஏர்வாடி, தொண்டி, தங்கச்சிமடம், பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இறங்குதளத்தில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டி ருந்தன.

    இதேபோல் 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என கடலோர போலீசார் எச்சரித்தனர்.

    மீன்பிடி தடை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலையிழந்தனர். மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் ரூ.5 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×