என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    திமுக குடும்பத்திற்கு ஊழல் செய்கிற பணத்தை டெலிவரி செய்யும் ATM மெஷினாக இருக்கும் மாஜி மந்திரி: கரூரில் விஜய் பேச்சு
    X

    திமுக குடும்பத்திற்கு ஊழல் செய்கிற பணத்தை டெலிவரி செய்யும் ATM மெஷினாக இருக்கும் மாஜி மந்திரி: கரூரில் விஜய் பேச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருக்கும்போது மாஜி மந்திரியை பற்றி என்னவெல்லாம் சொன்னாரு.
    • இந்த மாஜி மந்திரி திமுகவுக்கு என்னதா இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா?.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூர் மக்களை சந்தித்து, அவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:-

    கரூர் என்றாலே ஒரே ஒரு பெயர்தான் பேமஸா ஜொலிக்குது. அதற்கு யார் காரணம்?. யார் காரணம் என்று உங்களுக்குதான் தெரியுமே..,

    கரூர் பிரச்சனையை பற்றி பேசிவிட்டு, அவரை பற்றி பேசாமல் போனா, நல்லாவா இருக்கும்?. கரூர் வரை வந்துட்டு அவரை பற்றி பேசாமல் போனால் நல்லவா இருக்கும்?

    கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரி ஒருவர் இருந்தார்ல. தற்போது அவர் மந்திரி இல்ல. மந்திரி மாதிரி. நான் யாருன்னு சொல்லிதான் தெரியனுமா என்ன?. அவரை பற்றி தெரிந்து கொள்ள க்ளூ ஒன்று கொடுக்கலாமா?. பாட்டிலுக்கு 10 ரூபாய், பாட்டிலுக்கு 10 ரூபாய்..,

    தற்போது ஒரு விழா ஒன்று நடத்தினார்கள் அல்லவா. அது என்ன முப்பது பேர் விழா, ஆ., முப்பெரும் விழா, சாரி Confuse ஆகிடுச்சி. இந்த விழாவில் முதலமைச்சர், மாஜி மந்திரியை உச்சியில் தூக்கி வச்சி, மெச்சினதை நாம் காதாலேயே கோட்டோம்ல.

    எதிர்க்கட்சியில் இருக்கும்போது மாஜி மந்திரியை பற்றி என்னவெல்லாம் சொன்னாரு, என்னவெல்லாம் கேட்டாரு. Fact Check நண்பர்களே இதுபற்றி ஆராயத் தேவையில்ல. You Tube சென்றால அனைத்தும் இருக்கும். மிரண்டு விடுவீர்கள்.

    இந்த மாஜி மந்திரி திமுகவுக்கு என்னதா இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா?. திமுக குடும்பத்திற்கு ஊழல் பண்ணும் பணத்தையெல்லாம் 24x7 டெலிவர் செய்யும் மிஷினாக இருக்கிறாராம். இது நான் சொல்லல, ஊருக்குல்ல பேசிக்கொள்கிறார்கள்.

    இவ்வாறு விஜய் தெரிவித்தார்.

    Next Story
    ×