என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் 3-ந்தேதி முதல் விநாயகர் சிலைகள் விற்பனை: எண்ணூரில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
    X

    சென்னையில் 3-ந்தேதி முதல் விநாயகர் சிலைகள் விற்பனை: எண்ணூரில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரும்பாலான சிலைகள் சென்னை கொசப்பேட்டையில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
    • 10 அடிக்கு மிகாமலேயே விநாயகர் சிலைகளை தயாரித்து வருவதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் அன்றைய தினம் பூஜைக்காக வைக்கப்படுகின்றன. சென்னையில் மட்டும் பல்லாயிரக்கணக்கான சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.

    சென்னையில் வைக்கப்படும் பெரிய விநாயகர் சிலைகள் வாலாஜாபாத், கடலூர் உள்ளிட்ட இடங்களில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்தே கொண்டு வரப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலான சிலைகள் சென்னை கொசப்பேட்டையில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

    இது தொடர்பாக விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள சத்திய நாராயணன் என்பவர் கூறும்போது, முதல்கட்டமாக வாலாஜாபாத்தில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் விற்பனைக்கு வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    கொசப்பேட்டையில் சாலையில் வைத்தே சிலைகளை விற்பனை செய்வதால், வெயில், மழையால் பாதிக்காத வகையில் பிரத்யேகமான பெரிய கவர் போட்டே மூடி வைப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது தவிர எண்ணூர் மற்றும் எர்ணாவூரிலும் விநாயகர் சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை மாநகரில் பல இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள், பல்வேறு பாகங்களாக எடுத்து வரப்பட்டு மேற்கண்ட இடங்களில் வைத்தே இறுதி வடிவம் பெறுகின்றன.

    எண்ணூர், எர்ணாவூர் ஆகிய 2 இடங்களிலும் 800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளின் பாகங்களை ஒன்று சேர்த்து வர்ணம் பூசும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் வழிமுறைகளை கடைபிடித்து 10 அடிக்கு மிகாமலேயே விநாயகர் சிலைகளை தயாரித்து வருவதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×