தமிழ்நாடு செய்திகள்

அம்பானி வீட்டை காப்பாற்றவே வக்பு திருத்த சட்டம்- கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு
- பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.
- மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான்.
வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி திருப்பூர் ஷாகின்பாக் போராட்ட குழு மற்றும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தொடர் மாலை நேர கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
3-வது நாளாக நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி., தலைமை தாங்கினார்.
இதில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது:-
வக்பு திருத்த சட்டம் மூலம் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது. பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற மக்களை கூட காப்பாற்ற முடியாத துப்பில்லாத ஆட்சி தான் நடந்து வருகிறது.
மத்திய அரசை பொருத்தவரை அம்பானி, அதானி இருவர் மட்டும் தான். அவர்களுக்கான சட்டங்கள், அவர்களுடைய தொழில் வளர்ச்சி பெறுவதற்கான சட்டங்கள் என அந்த 2 பேருக்காக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் துயரமான நிலையை தான் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
பெரும்பான்மையான மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. மும்பையில் பல்லாயிரம் கோடியில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானியின் வீடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
12 ஆண்டுகள் அந்த வீட்டில் இருந்து விட்டால் அந்த வீடு அவருக்கே சொந்தம் என புதிய வக்பு சட்டம் சொல்கிறது. அந்த வீட்டை பாதுகாக்க வேண்டு ம் என்று புதிய வக்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.