தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 2034 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
- தொடர்ந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 107.59 அடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 2034 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கோடையிலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story