என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
    X

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணியில் இருக்க வேண்டிய 5 டாக்டர்கள் மற்றும் 4 நர்சுகள், 6 ஊழியர்கள் என யாரும் சுகாதார நிலையத்தில் இல்லை.
    • சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

    ராணிப்பேட்டை:

    வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு வழியாக சென்றார்.

    அப்போது மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த படியும், பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் வெளியே காத்திருந்ததை பார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் சென்று இது குறித்து கேட்டார்.

    காத்திருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் மின்விசிறி, இருக்கை, குடிநீர் என எதுவும் இல்லை என குற்றம் சாட்டினர். காத்திருக்கும் அறையை கூட திறக்காமல் இருப்பது தெரிந்தது.

    அதனை தொடர்ந்து பணியில் இருக்க வேண்டிய 5 டாக்டர்கள் மற்றும் 4 நர்சுகள், 6 ஊழியர்கள் என யாரும் சுகாதார நிலையத்தில் இல்லை. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

    பணியில் இருக்க வேண்டிய டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு காலதாமதத்திற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க வேண்டும், அதேபோல் விளக்கம் கொடுத்த பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×