என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் சென்னையில் உயிரிழப்பு
    X

    நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் சென்னையில் உயிரிழப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
    • மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.

    சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த இவர், தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

    பாஜக மாநில தலைவராகவும் இவர் இருந்துள்ளார். இதன்பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.

    சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அவருக்கு வீடு உள்ளது. அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அவர் தனது வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

    Next Story
    ×