தமிழ்நாடு செய்திகள்

ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்
- சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார்.
- பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கவின் ஆணவ படுகொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கவின் கொலை தொடர்பாக கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஆணவ படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியில் உள்ள கவின் வீட்டிற்கு நேரில் சென்று நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார். அவருடன் பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.