தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் ஓ.பி.எஸ். மீண்டும் சந்திப்பு..!
- இன்று காலை நடைபயிற்சியின்போது சந்தித்து பேசினார்.
- தற்போது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஓ. பன்னீர் செல்லும் இன்று நடைபயிற்சியின் போது சந்தித்து பேசினார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு சென்ற ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார். ஓ.பி.எஸ்.-ஐ வாசலுக்கு வந்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.
ஒரு நாளில் இரண்டு முறை சந்தித்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே த.வெ.க. உடன் இணைந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story