தமிழ்நாடு செய்திகள்

ஓ.பி.எஸ். கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்- நயினார் நாகேந்திரன்
- தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.
- முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதுதொடர்பாக கேள்வி கேட்ட செய்தியாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். அந்த நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.
பன்னீர் செல்வம் வெளியேறியது சொந்தப் பிரச்னையா அல்லது வேறு காரணமா எனத் தெரியவில்லை. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்.
முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம். இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை. அது தவறான கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story