தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு- போலீசார் குவிப்பு
- அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- நேற்றிரவு திடீரென அனுமதி மறுத்துள்ளதாக அ.தி.மு.க.வினர் புகார் கூறியுள்ளனர்.
ராணிப்பேட்டை:
அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அரக்கோணத்தில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக அனுமதி வழங்க கோரி கடிதம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றிரவு திடீரென அனுமதி மறுத்துள்ளதாக அ.தி.மு.க.வினர் புகார் கூறியுள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.