தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி: ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
- கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கைத்தறி நெசவாளர்கள், தென்னை விவசாயிகள், கல்குவாரி, கிரஷ் உரிமையாளர்கள் சங்கத்தினர், டிப்பர் லாரி டிரைவர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறந்திருந்தால் விவசாயிகள் நன்றாக இருந்திருப்போம் என்று கூறி அந்த விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்பின்பு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "அனைவரின் மனமும் புண்படாத வகையில் வேண்டும். அது தான் அரசாங்கத்தின் வேலை. அதனால் உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்கள், அதோடு நிறுத்தி கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.