தமிழ்நாடு செய்திகள்

போர்க்களத்தில் நிற்க கூடிய தளபதி தான் சீமான்- அண்ணாமலை புகழாரம்
- தமிழக அரசியலில் சீமானை தனி பெரும் தலைவராக உயர்த்தி இருக்கிறது.
- சீமானும், நானும் ஒரே மேடையில் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
சென்னையை அடுத்து உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஒன்றாக பங்கேற்றனர்.
அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
ஒரு அரசியல் தலைவர், ஒரு அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வதை விட, ஒரு போர்களத்தில் இருக்கும் தலைவனாக தான் சீமானை பார்த்து கொண்டு இருக்கிறேன்.
அதற்கு காரணம் அவரது கொள்கை தான். அந்த கொள்கையில் அவர் எடுத்து இருக்கும் உறுதிபூண்ட கொள்கை, அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாக போர்க்களத்தில் போராடும் மாண்பு. இது தமிழக அரசியலில் சீமானை தனி பெரும் தலைவராக உயர்த்தி இருக்கிறது.
எனக்கும், சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். அவ்வளவு தான் வித்தியாசம். இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இல்லை.
நான் சீமானுக்காக தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து கொண்டு இருப்பதற்கான காரணம். இன்றைக்கு அரசியல் களத்தில், நேர்மை குறைந்து இருக்கிறது. அது இருக்க கூடிய சீமானும், நானும் ஒரே மேடையில் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. சீமானுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.