தமிழ்நாடு செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை: அவசரகால வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அறிவிப்பு
- மே1 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கோடை விடுமுறையாகும்.
- அவசரகால வழக்குகளை விசாரிக்க அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் மே 1ஆம் தேதி முதல் முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கோடை விடுமுறை ஆகும். இதனால் அவசரகால வழக்குகளை விசாரிக்கும் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோர் மே 7, 8 தேதிகளில் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.
நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிர்மல் குமா ஆகியோர் மே 14, 15, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோர் மே 28, 29 ஆகிய தேதிகளிலும் விசாரிபபர்கள்.
இதேபோல் மதுரைக் கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல், பாலாஜி, ஜோதிராமன், வேல் முருகன், ராமகிருஷ்ணன், ராஜசேகர், ஸ்ரீமதி, விஜயகுமார், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமீன் அகமதி, பூர்ணிமா ஆகியோர் விடுமுறைக்கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story