தமிழ்நாடு செய்திகள்

துரை வைகோவுக்கு ஆதரவாக ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.
- விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அந்த கட்சியின் முதன்மை செயலாளராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று திடீரென்று அறிவித்தார். இதனால் கட்சியினரிடையே பரபரப்பு நிலவியது. ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் ராஜினாமாவை துரை வைகோ வாபஸ்பெற வேண்டும், இயக்கத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியில் விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், செட்டியார்பட்டி செயலாளர் நாகப்பன், சேத்தூர் செயலாளர் அயனப்பன், ராஜபாளையம் ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருநெல்வேலி ரோட்டில் முறம்பு பகுதியிலும் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.