என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நமது முக்கியமான உறுதிப்பாடு- பிரதமர் மோடி
    X

    தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நமது முக்கியமான உறுதிப்பாடு- பிரதமர் மோடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.
    • தேசத்தின் முதல், தனித்தன்மை வாய்ந்த செங்குத்து ரெயில்வே பாலம் தமிழ்நாட்டின்தான் உள்ளது.

    தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது சிறப்புரையை பிரதமர் மோடி தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் 77 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்சார்பு இந்தியாவின் உயிர்நாடியாக ரெயில்வே துறை உள்ளது. தேசத்தின் முதல், தனித்தன்மை வாய்ந்த செங்குத்து ரெயில்வே பாலம் தமிழ்நாட்டின்தான் உள்ளது.

    இந்தியாவை நவீனப்படுத்தும் வேள்வி நடைபெற்று வருகிறது.

    ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலம் பொறியில் துறையின் அற்புதமாக பார்க்கப்படுகிறது.

    மதுரை- போடி ரெயில் பாதை மின் மயமாக்கப்பட்டதால் வந்தே பாரத்துக்கான பாதை திறக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாதைகள் மூலம் தென்னிந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பயன்பெறுவர்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நமது முக்கியமான உறுதிப்பாடு. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.

    பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவமக்கல்லூரிகளை வழங்கி உள்ளோம்.

    மீனவர்களுக்கு எந்த அரசும் செய்யாத கரிசனத்தை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தை காண்கிறேன், இந்த உற்சாகத்தின் வெளிபாடாக செல்போனில் வெளிச்சம் காட்டுமாறு பிரதமர் மோடி கூறினார்.

    இதைதொடர்ந்து, அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் தங்கள் செல்போனில் டார்ச் அடித்து வௌிச்சத்தை காண்டித்து உற்சாகமடைந்தனர்.

    Next Story
    ×