தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்- விஜய் செய்த செயல்..!
- நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
- கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
விஜய் வருகைக்காக மதியம் முதல் காத்திருந்த பெருங்கூட்டம் கொஞ்சம் கூட கலையாமல் அதே உற்சாகத்துடன் காத்திருந்தது.
தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கரூரில் தனது பிரசார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையை தொடங்கினார்.
இந்நிலையில், பரப்புரை கூட்டத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் ஒன்று நுழைந்தது. உடனே, ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுங்கள் எனத் தனது தொண்டர்களிடம் விஜய் கூறினார்.
இதற்கிடையே, கூட்டத்தில் தொண்டர்கள் தண்ணீர் கேட்டதும் பிரசார வாகனத்தில் இருந்து விஜய் தண்ணீர் பாட்டில்களை கொடுத்தார்.
அப்போது, கூட்ட நெரிசலில் தொண்டர் ஒருவர் மயக்கமடைந்ததை அடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவைக்குமாறு விஜய் கூறியதை அடுத்து, ஆம்புலன்ஸ் வந்து அழைத்து சென்றது.