தமிழ்நாடு செய்திகள்

சக்திவாய்ந்த இந்தியாவிற்கு தூத்துக்குடியின் பங்களிப்பு அதிகம்- பிரதமர் மோடி
- இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
- வளர்ச்சி அடைந்த பாரதத்தையும், வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும் உருவாக்குவோம்.
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது சிறப்புரையை பிரதமர் மோடி தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்று கார்கில் வெற்றித்திருநாள், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.
4 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு பிறகு புன்னிய பூமியில் கால் பதிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் முருகன், ராமேஸ்வரம் சிவனின் ஆசீர்வாதத்துடன் தமிழ்நாட்டின் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன்.
திருச்செந்தூர் முருகன் துணையுடன் தமிழ்நாட்டில் புதிய தொழில் அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
வளர்ச்சி அடைந்த பாரதத்தையும், வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும் உருவாக்குவோம்.
அனைத்து துறைகளிலும் இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. உள்கட்டமைப்பு, எரிசக்தி எந்தவொரு மாநிலத்திற்கும் முதுகெலும்பு போன்றது.
தமிழக மக்கள் பல நூற்றாண்டுகளாக தன்னிறைவு பெற்ற பாரத்ததிற்காக உழைத்து வருகின்றனர். சக்திவாய்ந்த இந்தியாவிற்கு தூத்துக்குடியின் பங்களிப்பு அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.