தமிழ்நாடு செய்திகள்

2-ம் நாள் பூத் கமிட்டி கருத்தரங்கத்திற்கு புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
- 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
- மாநாட்டிலும் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு பூத்துக்கு ஒரு பெண், ஒரு ஆண் என தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 70 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர்.
இதனை தொடர்ந்து பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான மாநாட்டை 5 மண்டலங்களாக பிரித்து நடத்த விஜய் தீவிரம் காட்டினார்.
முதல் கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவை மண்டல அளவிலான வாக்கு ச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் மாநாடு கோவை சரவணம்பட்டி அருகே குரும்ப பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் நேற்று தொடங்கியது.
முதல் நாள் மாநாட்டில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த 7,500 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, வாக்கு சாவடி முகவர்களுக்கு பல்வேறு தகவல்கள் அடங்கிய பூத் கமிட்டி புத்தகம், எலக்ட்ரானிக் டேட்டா கொண்ட பென் டிரைவ்களை வழங்கி பேசினார். மேலும் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் விஜய், அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த மாநாட்டிலும் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் விஜய் அங்கிருந்து கார் மூலமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டார். இன்னும் சற்று நேரத்தில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற