என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    தலைகீழாக சுற்றும் ராட்சத சுனாமி ராட்டினத்தில் இருந்து தவறி கீழே விழுந்த இளம்பெண்
    X

    ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண். (வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளது)

    தலைகீழாக சுற்றும் ராட்சத சுனாமி ராட்டினத்தில் இருந்து தவறி கீழே விழுந்த இளம்பெண்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகரில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளியில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோல் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பொருட்காட்சி கடந்த 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள், உணவு பண்டங்கள், சிறுவர்களை குதூகலமாக்க செய்யும் விளையாட்டு அம்சங்கள், பிரமாண்ட ராட்டினங்கள் ஆகியவவை இந்த பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தற்போது பெரும்பாலான பள்ளிகளுக்கு முழு ஆண்டுத்தேர்வு முடிவடைந்த நிலையில் இந்த பொருட்காட்சியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த பொருட்காட்சியில் சுனாமி என்று பெயரிடப்பட்ட ராட்சத ராட்டினம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு அங்கு வந்த விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த கவுசல்யா (வயது 22) என்ற பெண் கட்டணம் செலுத்தி சுனாமி ராட்டினத்தில் ஏறினார். அப்போது அதனை இயக்குபவர் பல்வேறு விதிமுறைகளை பக்குவமாக எடுத்துக்கூறினார்.

    அதன்படி ராட்டினத்தில் ஏறியதும் கால்களை அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து பூட்டிக் கொள்ளுமாறும், பெல்ட் அணிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கவுசல்யா பாதுகாப்பு சாதனத்தை காலில் மாட்டாததால் ராட்டினம் தலைகீழாக சுற்றிய போது கால்களை தொங்கிய நிலையில் நிலை தடுமாறி இருக்கையில் இருந்து கீழே விழுந்தார்.

    இதைப்பார்த்த ராட்டினத்தில் அமர்ந்திருந்த மற்றவர்கள் கூச்சல் போட்டனர். உடனடியாக எந்திரத்தால் இயக்கப்பட்ட ராட்டினம் நிறுத்தப்பட்டது. கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த கவுசல்யாவை மீட்ட பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுனாமி ராட்டினம் என்று அழைக்கப்படும் அந்த ராட்டினத்தில் ஹைட்ராலிக் லாக் செய்யப்பட்டிருந்தும் ராட்டினத்தில் அமர்ந்திருந்த அந்த பெண் காலை ராட்டினத்தில் உள்ள பாதுகாப்பு லாக் செய்யாததால் அந்த பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    Next Story
    ×