என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    திருமணமான 2-வது நாளில்  நகை, பணத்துடன் புதுப்பெண் ஓடியதால் வாலிபர் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை
    X

    சிவசண்முகம்-தீபா

    திருமணமான 2-வது நாளில் நகை, பணத்துடன் புதுப்பெண் ஓடியதால் வாலிபர் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணத்திற்காக புரோக்கர்களுக்கு ரூ.1 லட்சமும், மணமகள் தீபாவுக்கு வரதட்சணையாக ரூ.1 லட்சமும் சிவசண்முகம் கொடுத்துள்ளார்.
    • திருமணம் நடந்து 2 நாளில் வீட்டைவிட்டு ஓடிய தீபா பல ஆண்களை இதுபோன்று திருமணம் செய்து கொண்டு மோசடி செய்யும் கல்யாண ராணியா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசண்முகம்(35). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி அந்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் சிவசண்முகம் மதுரையை சேர்ந்த திருமண புரோக்கர்கள் மூலம் 2-வது திருமணத்திற்கு பெண் தேடி கொண்டிருந்தார்.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் தீபா (30) என்ற பெண்ணை கடந்த 7-ந்தேதியன்று மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள கோவிலில் சிவசண்முகம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது சிவசண்முகத்தின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். மணமகள் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.

    இந்த திருமணத்திற்காக புரோக்கர்களுக்கு ரூ.1 லட்சமும், மணமகள் தீபாவுக்கு வரதட்சணையாக ரூ.1 லட்சமும் சிவசண்முகம் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து சிவசண்முகம் மணமகள் தீபாவை அழைத்து கொண்டு குடும்பத்தினருடன் வடகரையாத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

    இந்நிலையில் திருமணமான 2-வது நாளான கடந்த 8-ந்தேதி திடுமல் ராசாம்பாளையத்தில் உள்ள தனது அக்கா மலர்கொடியின் வீட்டிற்கு சிவசண்முகம் தீபாவை விருந்துக்கு அழைத்துச் சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சிவசண்முகத்தின் அக்கா வீட்டிலிருந்த தீபாவை காணவில்லை. இதையடுத்து சிவசண்முகம் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் புரோக்கர்கள் மற்றும் தீபாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவசண்முகம் விரக்தியில் இருந்தார். இந்நிலையில் ராசபாளையத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் கடந்த 10-ந் தேதி மாலை தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசண்முகத்தின் அக்காள் மலர்க்கொடி பார்த்து கதறி அழுதார். பின்னர் உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து சிவசண்முகத்தின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவசண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிவசண்முகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்தினார்.

    போலீசாரின் விசாரணையில் வீட்டை விட்டு வெளியே சென்ற தீபா திருமணத்திற்கு எடுத்த பட்டுப்புடவை, 9 பவுன் தங்க தாலி கொடியுடன் தலைமறைவானது தெரியவந்தது. மேலும் தலைமறைவான புதுப்பெண் தீபா மற்றும் பெண் உள்பட 6 புரோக்கர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் திருமணம் நடந்து 2 நாளில் வீட்டைவிட்டு ஓடிய தீபா பல ஆண்களை இதுபோன்று திருமணம் செய்து கொண்டு மோசடி செய்யும் கல்யாண ராணியா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×