உலகம்

கனடாவில் கூட்டத்தின் மேல் கார் மோதியதில் 11 பேர் பலி
- கனடாவில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சி இடையே வேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது.
ஒட்டாவா:
கனடாவின் வென்கவுர் நகரில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கனடாவாழ் பிலிப்பைன்ஸ் நாட்டினர், உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி சாலையோரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது. கூட்டத்தில் இருந்த பலர் மீது கார் மோதியது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். 30 வயதுடைய அவர் வென்கவுர் பகுதியில் வசித்து வந்தவர் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கூட்டத்தில் கார் புகுந்து மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story