என் மலர்

    உலகம்

    309 டிரோன்கள்.. 8 ஏவுகணைகள்: உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்.. 16 பேர் பலி -  155 பேர் காயம்
    X

    309 டிரோன்கள்.. 8 ஏவுகணைகள்: உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்.. 16 பேர் பலி - 155 பேர் காயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கீவ் மீது நேற்று இரவு முழுவதும் 309 டிரோன்கள் மற்றும் 8 குரூஸ் ஏவுகணை மழை பொழிந்தது.
    • டொனெட்ஸ்கின் முக்கிய கிழக்குப் பகுதியில் உள்ள மலைப்பாங்கான நகரமான சாசிவ்வைக் கைப்பற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்குப் பிறகு உக்ரைனில் ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

    தலைநகர் கீவ்-வின் பல பகுதிகளில் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கீவ் மீது நேற்று இரவு முழுவதும் 309 டிரோன்கள் மற்றும் 8 குரூஸ் ஏவுகணை மழை பொழிந்தது.

    இதில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 155 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் ஆறு வயது சிறுவனும் அவனது தாயும் அடங்குவர். காயமடைந்தவர்களில் 12 குழந்தைகளும் அடங்குவர் என கியேவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.

    இதற்கிடையே டொனெட்ஸ்கின் முக்கிய கிழக்குப் பகுதியில் உள்ள மலைப்பாங்கான நகரமான சாசிவ்வைக் கைப்பற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் ரஷியா மீது 100 வரி விதிப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புடினுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×