உலகம்

சாலையில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த பஸ்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
- லண்டனில் மாடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
- மருத்துவமனை அருகே சென்றபோது அந்த பஸ்சில் தீப்பிடித்தது.
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மாடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. போர்ட்லேண்ட் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே சென்றபோது அந்த பஸ்சில் திடீரென தீப்பிடித்தது.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
முன்னதாக, பஸ்சில் இருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றினர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மருத்துவமனை அருகே மாடி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story