உலகம்

நிலநடுக்கத்தால் குலுங்கிய மருத்துவமனை.. அசராமல் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் - வீடியோ வைரல்
- ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் நேற்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- மருத்துவர்கள் பீதியடையாமல் அறுவை சிகிச்சையை முடித்தனர்.
ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் நேற்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ரஷியா, ஜப்பான், அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது கம்சட்கா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் அதிர்ந்த போதிலும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது மருத்துவமனை கட்டடம் குலுங்கியது. அப்போது மருத்துவ ஊழியர்கள் அறுவை சிகிச்சை அரங்கில் உள்ள ஸ்ட்ரெச்சரை இறுக்கமாகப் பிடித்தனர்.
மருத்துவர்கள் பீதியடையாமல் அறுவை சிகிச்சையை முடித்தனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும், நோயாளி குணமடைந்து வருவதாகவும் ரஷிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story