என் மலர்

    உலகம்

    பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம் - கிண்டலடித்த டிரம்ப்
    X

    பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம் - கிண்டலடித்த டிரம்ப்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய டிரம்ப், பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்துள்ளோம். இதன்படி, பாகிஸ்தானிலுள்ள பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை இணைந்து மேற்கொள்ள போகிறோம். இதற்காக எண்ணெய் நிறுவனம் தேர்வு செய்யும் நடைமுறையில் ஈடுபட்டு இருக்கிறோம்.

    யாருக்கு தெரியும், ஒரு நாள் இந்தியாவுக்கு கூட பக்ஷிதன் எண்ணெயை விற்பனை செய்ய கூடும் என்று டிரம்ப் கிண்டலாக கூறினார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று தொடர்ந்து டிரம்ப் கூறி வரும் நிலையில், பாகிஸ்தானுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×