மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்திடமிருந்து வந்த 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,757 கோடி) சம்பள வேலை வாய்ப்பை நிராகரித்து கவனம் பெற்றுள்ளார் ஓபன்ஏஐ முன்னாள் ஊழியர் மீரா முராதி (36 வயது)
அல்பேனியாவை சேர்ந்த மீரா முராதி (Mira Murati) மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றவர்.
ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, அவர் கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்ந்த அவர், குறுகிய காலத்தில் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உயர்ந்தார்.
சாட்ஜிபிடி, டால்-இ மற்றும் கோடெக்ஸ் போன்ற உலகை மாற்றியமைத்த திட்டங்களை வழிநடத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டபோது, மீரா முராதி மூன்று நாட்களுக்கு இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றினார்.
சாட்ஜிபிடியில் `ஏஐ மூளை' என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு வந்த மீரா, சமூகப் பொறுப்புடன் ஏஐ செயலிகளை உருவாக்க வேண்டும் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விலகிய மீரா முராதி, தனது "திங்கிங் மெஷின்ஸ் லேப்" Thinking Machines Lab) நிறுவனத்தை தொடங்கினார்.