உலகம்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமானி கைது
- டெல்டா ஏர்லைன்ஸில் அவர் பணிபுரிந்து வந்தார்.
- சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள விமானி அறையில் இருந்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை விமானி ருஸ்டம் பகவாகர், குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்டா ஏர்லைன்ஸில் அவர் பணிபுரிந்து வந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள விமானி அறையில் இருந்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
டெல்டா போயிங் விமானம் மின்னியாபோலிஸிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியது. விமானம் நின்ற சிறிது நேரத்திலேயே, போலீசார் விமானி அறையில் நுழைந்து பகவாகரை கைது செய்தனர்.
குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடந்து வருகிறது. பகவாகர் மீதான குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியடைந்ததாக கூறிய டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அவரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.
Next Story