என் மலர்

    உலகம்

    இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: ஈரான் மந்திரி
    X

    இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்: ஈரான் மந்திரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் சகோதர நாடுகள்.
    • மற்ற நட்பு நாடுகளைப் போல அவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

    டெஹ்ரான்:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என ஈரான் மந்திரி சயீது அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஈரான் வெளியுறவு மந்திரி சயீது அப்பாஸ் அராச்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

    இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் சகோதர நாடுகள். எங்கள் இடையே நூற்றாண்டு பழமையான கலாசாரம் மற்றும் நாகரிக உறவுகள் உள்ளன. மற்ற நட்பு நாடுகளைப் போல அவர்களுக்கும் நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்.

    இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×