உலகம்

சீனாவில் நுழைய பிரிட்டன் பெண் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு
- ஹாங்காங் விமான நிலையத்தில் பிரிட்டன் பெண் எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டார்.
- சீனாவின் நடவடிக்கைக்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்தது.
லண்டன்:
பிரிட்டனில் உள்ள லிபரல் டெமாக்ரடிக் கட்சி எம்.பி. வேரா ஹோப்ஹவுஸ் (65). இவரது மகன் சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக வேரா தனது கணவருடன் சீனா சென்றிருந்தார்.
ஆனால் சீனாவின் மனித உரிமைகள் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக ஹாங்காங் விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அதேசமயம் அவரது கணவருக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. பின்னர், வேரா விமானம் மூலம் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இங்கிலாந்து வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதேபோல், இஸ்ரேல் விமான நிலையத்திலும் ஆளுங்கட்சி பெண் எம்.பி.க்கள் 2 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story