என் மலர்

    நேபாளம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
    • இளைஞர் போராட்டங்களின் போது ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி முக்கிய பங்காற்றியது.

    காத்மண்டு:

    நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது.

    பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை.

    தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி.சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கினா்.

    ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

    இதற்கிடையே, வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குச்சீட்டு எண்ணும் பணி மும்முரமாக நடந்தது. இதில் 160 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியான நிலையில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 110 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் அதிக இடங்களில் வென்று நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இவரது வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
    • இளைஞர் போராட்டங்களின் போது ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி முக்கிய பங்காற்றியது.

    நேபாளத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது.

    நேபாள பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும் மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை.

    தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கியுள்ளனா்.

    அதேபோல் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

    நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு சீட்டு எண்ணும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் 77 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியான நிலையில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 59 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

    நேபாளி காங்கிரஸ் 9 தொகுதியிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 5 தொகுதியிலும் முன்னிலை பெற்றிருந்தன. முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டாவின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கே.பி ஒலி அரசாங்கத்திற்கு எதிரான இளைஞர் போராட்டங்களின் போது ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி முக்கிய பங்காற்றியது. அக்கட்சிக்கு இளைஞர்கள் அமோக ஆதரவு வந்த நிலையில் தேர்தலில் முன்னிலை பெற்று வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடையும்.
    • தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காத்மண்டு:

    அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி பதவி ஏற்றார்.

    அவரது பரிந்துரைப்படி நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மார்ச் 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேபாள நாடாளுமன்றத்துக்கு இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், 1,89,03,689 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தின் சக்திவாய்ந்த சபையான கீழ் சபைக்கு 3,406 வேட்பாளர்களில் 165 உறுப்பினர்களை வாக்காளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    மீதமுள்ள 110 இடங்களுக்கு 3,135 வேட்பாளர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொதுத் தேர்தலுக்கான பிரசாரம் கடந்த 2-ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. நேபாள எல்லையோரங்கள் கடந்த 2-ம் தேதி முதல் மூடப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதிகள் நிறுத்தப்பட்டன.

    காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடையும். தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்தில், 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.
    • 8 பெண்கள் உள்ளிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நேபாளத்தின் போக்கராவிலிருந்து காத்மாண்டுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில், 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.

    ஆற்றில் பேருந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பெண்கள் உள்ளிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காத்மண்டுவில் இருந்து 50 பயணிகளுடன் புத்தா ஏர் விமானம் புறப்பட்டது.
    • பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் இரவு தரையிறங்கியது.

    காத்மண்டு:

    நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து 50 பயணிகளுடன் புத்தா ஏர் விமானம் புறப்பட்டது. பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் இரவு தரையிறங்கியது.

    அப்படி தரையிறங்கும்போது அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. இதையடுத்து விமானிகள் அந்த விமானத்தைப் பாதுகாப்பாக நிறுத்தினர்.

    விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பலேந்திர ஷா, பாராளுமன்றக் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான முகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தேர்தல் ஆணையம் ஒதுக்கிய ‘மணி’ சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

    நேபாளத்தில், காத்மாண்டு மாநகராட்சி மேயராக இருக்கும் பலேந்திர ஷா, அடுத்த ஆண்டு (2026) மார்ச் 5 நேபாளத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து, அவர் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒரு உடன்படிக்கையை கையெழுத்திட்டனர்.

    தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உருவான ஏழு அம்ச உடன்படிக்கையின் படி, 35 வயதான பலேந்திர ஷா, பாராளுமன்றக் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான முகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த உடன்படிக்கையின்படி, பாலேன் மற்றும் அவரின் குழு, தேர்தல் ஆணையம் ஒதுக்கிய 'மணி' சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

    பாலேன் என அழைக்கப்படும் பலேந்திர ஷா, அந்த நாட்டின் முன்னாள் ராப் பாடகர் ஆவர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்களின் எதிர்காலம் அவர்களின் ஆடம்பரங்களுக்காக கொள்ளை அடிக்கப்படுவதை இளைஞர்கள் உணர்ந்தனர்.
    • புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை கிளறி விட ஒரு உடனடி காரணி தேவை.

    2025, நேபாள வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. பல்லாண்டுகளாக நீடித்த பழைய அரசியல் கட்டமைப்பை 1997 முதல் 2012 இடையில் பிறந்த 'ஜென்-சி' (Gen Z) என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் தங்கள் போராட்டத்தின் மூலம் தகர்த்தெறிந்துள்ளனர்.

    ஒரு புரட்சி தொடங்க 2 காரணிகள் உண்டு. ஒன்று நீண்டகால காரணி. மற்றொரு உடனடி காரணி.

    நேபாளத்தை அரசியல் மாற்றத்திற்கான விதைகள் 2025 தொடக்கத்திலேயே தூவப்பட்டன.

    பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு மீது ஊழல் புகார்கள், பொருளாதாரத் மந்த நிலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக இளைஞர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

    இதேநேரம் அரசியல் தலைவர்களின் மகன்களும் மகள்களும் ஆடம்பர வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரப்பப்பட்டன. தங்களின் எதிர்காலம் அவர்களின் ஆடம்பரங்களுக்காக கொள்ளை அடிக்கப்படுவதை இளைஞர்கள் உணர்ந்தனர். இதுவே நீண்டகால காரணிகள்.

    புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை கிளறி விட ஒரு உடனடி காரணி தேவை. அந்த வகையில் செப்டம்பர் 4, 2025 அன்று, அரசு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதித்தது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கையே நாடு தழுவிய போராட்டத்திற்கு உடனடி காரணியாக அமைந்தது.

    செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நேபாளத்தின் வீதிகள் போர்க்களமாக மாறின.

    பாராளுமன்றக் கட்டிடம், உச்ச நீதிமன்றம் மற்றும் பிரதமரின் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டிடங்கள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.

    பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் களம் இறக்கப்பட்டது.

    இந்தப் போராட்டங்களால் நேபாளத்திற்கு சுமார் 586 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    போராட்டத்தின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் செப்டம்பர் 9-ஆம் தேதி பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, நாட்டின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.

    சுவாரஸ்யமாக, இவரது தேர்வு Discord என்ற சமூக வலைதளம் மூலம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மற்றும் ராணுவம், ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் அமைந்தது.

    நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பொதுத்தேர்தல் 2026 மார்ச் 5 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2025-ஆம் ஆண்டு நேபாள இளைஞர்கள் தங்களின் வலிமையால் ஒரு ஆட்சியையே கவிழ்க்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தனர்.

    வரும் 2026 தேர்தல், நேபாளத்தில் மீண்டும் பழைய அரசியல்வாதிகளின் கைகளுக்குச் செல்லுமா அல்லது புதிய இளம் தலைமுறைத் தலைவர்களை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

    இதேபோல் மற்ற சில நாடுகளிலும் அரசுக்கு எதிராக ஜென் z போராட்டங்கள் வெடித்தன.

    மடகாஸ்கர்: அகடோபர் மாதம் மடகாஸ்கரில் கடும் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதனை எதிர்த்துத் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம், விரைவிலேயே அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான மாபெரும் புரட்சியாக உருவெடுத்தது.

    இந்தோனேசியா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான வீட்டு வாடகைப் படிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் இந்தோனேசிய இளைஞர்கள் போராடினர்.

    இந்தப் போராட்டத்தின் தீவிரத்தால் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    மொராக்கோ: 2030 பிபா கால்பந்து உலகக் கோப்பைக்காக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கிய அதே வேளையில், கல்வி மற்றும் சுகாதாரம் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.

    'GenZ 212' என்ற ஆன்லைன் குழுவின் மூலம் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.

    பல்கேரியா: 2026-ஆம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட் ஊழலுக்கு வழிவகுப்பதாகக் கூறி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராடினர்.

    பிலிப்பைன்ஸ்: வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடந்த பெரும் ஊழலைக் கண்டித்து பிலிப்பைன்ஸ் இளைஞர்கள் களமிறங்கினர். தவறு செய்த அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அதிபர் மார்க்கோஸ் ஜூனியருக்கு அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

    கென்யா: கென்யாவில் வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து தொடங்கிய போராட்டம், 2025 ஜூலை மாதத்தில் போலீஸ் அராஜகத்திற்கு எதிரான போராட்டமாக மாறியது. இளைஞர்கள் கடத்தப்படுவதையும் சட்டவிரோதக் கைதுகளையும் எதிர்த்து அவர்கள் இடைவிடாமல் போராடினர்.

    மெக்சிகோ: குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு மற்றும் மேயர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இளைஞர்கள் தேசிய மாளிகைக்குள் அதிரடியாகப் புகுந்து போராடினர்

    பெரு: அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் தினா பொலுவார்டே பதவி விலகக் கோரி செப்டம்பரில் போராட்டங்கள் வெடித்தன.

    2025-ஆம் ஆண்டில் 'ஜென் Z' இளைஞர்கள் வெறும் சமூக வலைதளங்களில் மட்டும் கருத்துகளைப் பதிவிடாமல், களத்தில் இறங்கி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு புதிய அரசியல் வடிவதற்கான ஆரம்பமாகவே இந்த உலகளாவிய போராட்டங்கள் பார்க்கப்படுகின்றன. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேபாளத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • சிமாராவில் பிற்பகல் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாட்டை எதிர்த்தும் சர்மா ஒலி அரசின் ஊழல் மற்றும் நாட்டின் பொருளாதார பிரச்னைகளை எதிர்த்தும் ஜெனரல் z இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் வன்முறையாக மாறி, பாராளுமன்றம், நீதிமன்றம், அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையில் 76 பேர் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து சர்மா ஒலி மற்றும் அமைச்சர்கள் பதவி விலகினர்.

    தொடர்ந்து ஜெனரல் z விருப்பப்படி அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுசீலா கார்க்கி இடைக்கால தலைவராக பதவி ஏற்றார். நேபாளத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த சூழலில் நேபாளத்தின் பாரா மாவட்டத்தின் சிம்பாரா பகுதியில் ஜெனரல் z மற்றும் சர்மா ஒலி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    அரசாங்க எதிர்ப்பு பேரணியில் உரையாற்ற சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வருவதை எதிர்த்து ஜெனரல் z எதிர்த்து வீதியில் இறங்கி போராடிய நிலையில் நேற்று, சிமாரா விமான நிலையம் அருகே அவர்களுக்கும் சர்மா ஒழி ஆதரவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    நிலைமை மோசமடைவதை தடுக்க சிமாராவில் இன்று பிற்பகல் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
    • தொழில்நுட்ப கோளாறால் ரன்வேயில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய ரன்வேயில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை. விமான நிலைய ரன்வே வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், விமானங்கள் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிப்பட்டனர்.

    தொழில்நுட்ப கோளாறை செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் பிரதமர் ராஜினாமா செய்தார்.
    • அடுத்த வருடம் மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஒலி பதவி விலகினார். இதனால் கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இவர் மார்ச் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் நேபாளத்தில் உள்ள 10 கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. இதில் CPN (மாவோயிஸ்ட் மையம்), CPN (ஒருங்கிணைந்த சோசலிஸ்ட்) கட்சிகளும் அடங்கும்.

    CPN (மாவோயிஸ்ட் மையம்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்பகமல் தஹால் பிரசந்தா ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். CPN (ஒருங்கிணைந்த சோசலிஸ்ட்) கட்சி தலைவர் மாதவ் குமார் நேபாள் துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

    10 கட்சிகள் இணைந்துள்ள புதுக்கட்சிக்கு நேபாளி கம்யூனிஸ்ட் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரும்பாலான கம்யூஸ்ட் கட்சிகளில் உள்ள மாவோயிஸ்ட் பெயர் கைவிடப்படுகிறது. முக்கியமாக மாவோயிஸ்ட் மையம் கட்சி கைவிடுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஒருமித்த கருத்து ஏற்பட கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்தியாவின் அண்டை மாநிலமான நேபாளத்தில், ஊழல் அரசியல் தலைவர்களுக்கு எதிராக Gen Z என்ற பெயரில் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 73 வயதான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றார். பதவி ஏற்ற சுஷிலா கார்கி, அடுத்த வருடம் மார்ச் 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

    அதற்கான பணிகளை அவர் செய்து வருகிறார். இந்த நிலையில், நேபாளத்தில் உள்ள 7 மாகாண முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    மாறிவிட்ட அரசியல் சூழலில் மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு இடையேயான உரையாடல் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக பிரதமரின் செய்தித் தொடர்பாளர் ராம் பகதூர் ராவல் தெரிவித்தார்.

    தேர்தல் தொடர்பாக கட்சிகளின் நிலைகளை தெளிவாக தெரிந்து கொள்ள நேற்று, நேபாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் ககன் தபா, பிஷ்வா பிரகாஷ் சர்மாவை சந்தித்து பேசினார்.

    நேபாளி காங்கிரஸ், தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது என உறுதி அளித்துள்ளது. நாங்கள் Gen Z குரூப்புகளுடனும் மற்ற அரசியல் கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்துவோம் எனத் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடனே அங்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • படுகாயம் அடைந்த10 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நேபாளத்தின் கர்னாலி மாகாணம் பாபிகோட்டின் ஜர்மாரே பகுதியில் 18 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு, ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த ஜீப் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    உடனே அங்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த10 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முதற்கட்ட விசாரணையில் அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

    ×