உலகம்

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: விமர்சனத்துக்கு உள்ளான கனடா.. ஏன்?
- G7 குழுவில் உறுப்பினராக நாடுகளில் கனடா மட்டும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தது.
- அர்த்தமற்றதும் அதிர்ச்சியூட்டும்துமான வன்முறைச் செயலாகும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்தியாவை உள்ளடக்கிய G7 குழுவில் உறுப்பினராக நாடுகளில் கனடா மட்டும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தது. கனடாவின் மௌனம் கண்டனத்துக்கு உள்ளான நிலையில் தாக்குதல் நடந்து 30 மணி நேரம் கழித்து அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மார்க் கார்னி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் அதிர்ச்சியடைந்தேன். அப்பாவி பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கொன்று காயப்படுத்தியது அர்த்தமற்றதும் அதிர்ச்சியூட்டும்துமான வன்முறைச் செயலாகும்.
கனடா இந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலியேவ் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்திருந்தார். கனடாவுடன் இந்தியாவின் உறவு சமீப காலங்களாக நன்முறையில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.