என் மலர்

    உலகம்

    உக்ரைனுடன் 3 நாள் தாற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த புதின் - ஏன் தெரியுமா?
    X

    உக்ரைனுடன் 3 நாள் தாற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த புதின் - ஏன் தெரியுமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 72 மணி நேர போர்நிறுத்தம் மே 8 ஆம் தேதி தொடக்கத்தில் இருந்து மே 10 ஆம் தேதி இறுதி வரை நீடிக்கும்
    • நிகழ்ச்சியில் பங்கேறக் பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பலருக்கு ரஷியா அழைப்பு விடுத்தது.

    இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த மாதம் உக்ரைனுடனான போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் இன்று அறிவித்தார்.

    4 ஆண்டுகளாக நடந்து வரும் உக்ரைன் போரில் முதல் முறையாக கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று ரஷியா தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்திருந்ததது. இந்நிலையில் இரண்டாவது முறையாக புதிய போர் நிறுத்த அறிவிப்பு வந்துள்ளது.

    72 மணி நேர போர்நிறுத்தம் மே 8 ஆம் தேதி தொடக்கத்தில் இருந்து மே 10 ஆம் தேதி இறுதி வரை நீடிக்கும் என ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த போர் நிறுத்தத்தை ஏற்கும்படி உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    எனினும் உக்ரைன் தரப்பில் அத்துமீறல்கள் ஏற்பட்டால், ரஷிய ஆயுதப் படைகள் பதிலடி அளிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக மே 9 ஆம் தேதி நடக்கும் வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேறக் பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் பலருக்கு ரஷியா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×