என் மலர்

    உலகம்

    ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல்..  இந்தியர் படுகாயம் - அதிர்ச்சி வீடியோ
    X

    ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல்.. இந்தியர் படுகாயம் - அதிர்ச்சி வீடியோ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாக்குதலில் சரண்ப்ரீத்தின் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்பட்டது.
    • இந்தியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர் தாக்கப்பட்டார்.

    வெளிநாடுகளில் இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

    இந்த சம்பவம் ஜூலை 19 சனிக்கிழமை இரவு அடிலெய்டில் உள்ள கிந்தோர் அவென்யூவில் நடந்தது.

    நகரின் லைட் ஷோவை பார்க்க 23 வயதான சரண்ப்ரீத் சிங் அவரது மனைவியும் வந்திருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் எந்தத் தூண்டுதலும் இல்லாமல் சரண்ப்ரீத்தை காரில் இருந்து இழுத்து சாலையில் தள்ளி அவர்கள் தாக்கியுள்ளனர்.

    தாக்குதலில் சரண்ப்ரீத்தின் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்பட்டது.அவர் மயக்கமடைந்த பிறகு காவல்துறையினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இந்தியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர் தாக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தாக்குதலை படம் பிடித்துக் கொண்டிருந்த சரண்ப்ரீத்தின் மனைவியையும் கும்பல் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×