என் மலர்

    உலகம்

    பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால், உக்ரைன்-ரஷியா போர் நிறுத்த முயற்சி கைவிடப்படும்- அமெரிக்கா
    X

    பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால், உக்ரைன்-ரஷியா போர் நிறுத்த முயற்சி கைவிடப்படும்- அமெரிக்கா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
    • சவுதி அரேபியா, பிரான்சில் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடங்களை தாண்டி 4ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் என்றார்.

    ஜனவரி 19ஆம் தேதி அதிபராக பதவி ஏற்றதும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும், ரஷிய அதிபர் புதின் உடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அமெரிக்கா ஒரு பரிந்துரையை வழங்கியது. அதேபோல் உக்ரைனும், ரஷியாவும் பரிந்துரைகள் வழங்கினது. ஆனால் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பரிந்துரைகளை ரஷியா ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் அணிதிரட்டல் முயற்சிகள் மற்றும் மேற்கத்திய ஆயுத விநியோகங்களை நிறுத்துதல் போன்ற ரஷியாவின் பரிந்துரைகளை உக்ரைன் ஏற்கவில்லை.

    இதனால் அமெரிக்காவின் ஒருமாத கால போர் நிறுத்தம் எண்ணம் நிறைவேறாமல் உள்ளது. இருந்த போதிலும் உக்ரைன், ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    சவுதி அரேபியால் முதற்கட்ட பேச்சுவார்தை நடைபெற்றது. அமெரிக்காவின் விட்காஃப் 3 முறை புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இந்த நிலையில்தான் பிரான்ஸ் தலைவர் பாரீசில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமெரிக்கா, உக்ரைன், ஐரோப்பிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்திற்குப் பிறகு, இன்னும் சில நாட்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்த முயற்சியை அமெரிக்கா கைவிடும் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

    அடுத்த வாரம் லண்டனில் அடுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    பாரீஸ் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பேசிய ரூபியோ "போர் நிறுத்தம் சாத்தியமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலையை நாங்கள் எட்டவில்லை. அமெரிக்க நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்தம் சாத்தியமா? இல்லையா? என்பதை இன்னும் சில நாட்களில் முடிவு செய்ய விரும்புகிறது" என்றார்.

    Next Story
    ×