என் மலர்

    உலகம்

    உலகை ஒரு பெரிய ஆபத்தை நோக்கி இட்டுச் செல்கிறது - ஈரான் மீதான தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் கண்டனம்
    X

    உலகை ஒரு பெரிய ஆபத்தை நோக்கி இட்டுச் செல்கிறது - ஈரான் மீதான தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் கண்டனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரானிய வெளியுறவு அமைச்சர் மாஸ்கோவிற்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    • ஃபோர்டோ உட்பட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

    ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை ரஷிய அதிபர் புதின் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    திங்களன்று மாஸ்கோவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு புதினின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

    "எந்த தூண்டுதலும் அடிப்படையும் இல்லாமல் ஈரான் மீதான தாக்குதலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் புதின் கூறினார். மேலும் ஈரானுடனான மோதலில் மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள சக்திகளின் ஈடுபாடு உலகை ஒரு பெரிய ஆபத்தை நோக்கி இட்டுச் செல்கிறது" புதின் எச்சரித்தார்.

    மேலும், "ஈரானிய மக்களுக்கு உதவ ரஷ்யாவின் முயற்சிகள் தொடரும். ஈரானிய வெளியுறவு அமைச்சர் மாஸ்கோவிற்கு வந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது தற்போதைய சூழ்நிலையைப் பற்றி விவாதிக்கவும், பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து ஆலோசனைகளை நடத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும்" என்று புதின் தெரிவித்தார்.

    முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சர்வதேச நெறிமுறைகளை மீறி, ஃபோர்டோ உட்பட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி கனவைத் தகர்த்ததாக அமெரிக்கா கூறிய போதிலும், குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறுகிறது.

    Next Story
    ×